Zool Ad Network

Thursday, February 21, 2013

ஆண் Vs பெண்

ஒரு பெண் ஒரு நாள் இரவு வீடு திரும்பாமல் வெளியே தங்கி விட்டு, மறுநாள் காலை வீடு திரும்பினாள்.கணவனிடம்”நேற்று இரவு நேரமாகிவிட்டதால் என் உயிர்த்தோழி ஒருத்தியோடு தங்கி விட்டேன்”என்றாள். அவள் கணவன் அவள் உயிர்த்தோழிகள் பத்துப் பேருக்கு தொலைபேசி விசாரித்தான். அவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரியாது  எனச் சொல்லி விட்டார்கள்!

மறுநாள் கணவன் இரவு வீடு திரும்பாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் சொன்னான் ”நேற்று நேரமாகி விட்டதால் என் உயிர் நண்பன் ஒருவனுடன் தங்கி விட்டேன்.” அவன் மனைவி அவன் உயிர் நண்பர்கள் பத்துப்பேரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். 
ஒவ்வொருவருவரும் தனித்தனியே அதை உண்மையென்றும் அவருடன்தான் தங்கியதாகவும் சொன்னார்கள். அதில் இருவர் ஒருபடி மேலே போய் சொன்னது, 
                         '' அவர் இன்னும் இங்க தாங்க  இருக்காரு !!!!!!!!!!! ''

                                                                                                    - இணையத்தில் படித்தது 

Sunday, February 17, 2013

இது இப்போ தேவையான பதிவு


மக்களே...!!!

நம்ம கோவம் நல்லது வலைப்பூவுல போட அடுத்த பதிவு கெடைச்சிடுச்சி. உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கைப்படி நடுத்தர வளரும் நாடுகளில் நிகழும் சாலை விபத்துகளில் 90 சதவித விபத்துகளுக்கு மது போதையே காரணம் அப்படின்னு தெரிய வந்திருக்கு. இப்போ நம்ம மாநிலத்தில் இருக்கிற நிலைமை பத்தி நான் தனியா எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. 

உதாரணம் - எனது நண்பர்களில் ஒருவர் போன வாரம் சாலை விபத்தில் இறந்துட்டார். குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போய்  எங்கியோ மோதிட்டார். இதுக்கும் அவர் ஒன்னும் குடிக்கு அடிமையானவர் எல்லாம் கிடையாது. எப்பவாவது ரொம்ப அரிதா ஒருமுறை குடிக்கிறவர். மத்தவங்களுக்கு இது ஒரு செய்தி தான். ஆனா, அவர் குடும்பத்துக்கு...?????

அவர் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கிட்டவர். இவர் மற்றும் இவர் மனைவியோட சொந்தக்காரங்க கிட்ட இருந்து பெரிய அளவுக்கு எந்த ஆதரவும் கெடையாது. கிட்டத்தட்ட மூணு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு, இப்போ தான் சமீபத்துல அரசாங்க பள்ளியில் ஆசிரியர் வேலை கெடைச்சது. 4 வயசு மற்றும் 1 வயசுல ரெண்டு பெண் குழந்தைகள். எல்லாம் நல்லப்படியா முடிஞ்சி சரியா செட்டில் ஆக வேண்டிய நிலையில, இறந்துட்டார். காதல் மனைவி, குட்டியா தேவதை மாதிரி ரெண்டு சின்ன வயசு குழந்தைகள். அரசாங்க வேலை. எல்லாம் போய் இப்போ எல்லாரும் ஆதரவில்லாம நிக்கிறாங்க.

குடிக்காம இருக்க  முடியலையா...??? குடும்பத்தை நெனச்சி பாருங்க. அப்பவும் முடியலையா???? குறைந்த பட்சம் குடிச்சிட்டு வெளிய போறது, வண்டி ஓட்றதுன்னாவது இல்லாம இருங்க.


இது ஒரு சின்ன உதாரணம். இப்படி எவ்வளவோ...!!!!!!!!! இதை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா, இப்போ நம்ம தமிழ்நாட்டுக்கு தேவையான ஒன்னு. கண்டிப்பா பாருங்க. கமெண்ட்ஸ் போடுங்க. 


Saturday, February 2, 2013

ரமணி Vs ரமணி - கலக்கல் காமெடி சீரியல்...!!!!

நண்பர்களே...!!! 

ரமணி Vs ரமணி - நம்மள்ள பல பேரு இந்த சீரியலை மறந்திருக்க முடியாது. ராஜ் டிவியில் வந்த சீரியல்ல மர்ம தேசம் சீரியலுக்கு அப்புறம் வெளி வந்திட்டு இருந்த அந்த காலத்துல இதுதான் டாப் மோஸ்ட் காமெடி சீரியல். இதுல ரெண்டு சீசன் வந்தது. இது எந்த சீசன்னு தெரியல. அனேகமா இதுதான் முதல் சீசன்னு நெனக்கிறேன். தேவதர்சினியும், ராம்ஜியும் அப்பாவித்தனமான நடிப்பால் கலக்கியிருப்பாங்க. பப்லு நடிச்சி வந்தது ரெண்டாவது சீசனா இருக்க நெறைய சான்ஸ் இருக்கு. 

                              

அதுலயும் அந்த குட்டி பொண்ணு வார்த்தை வார்த்தையா பேசி தன்னோட பங்குக்கு அசத்தியிருக்கும். மின்பிம்பங்கள் கம்பனியோட இன்னொரு ஹிட் சீரியல் இது.

நான் பெருசா ஒன்னும் சொல்லப்போறது இல்லை. லிங்க் தரேன். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Wednesday, January 23, 2013

MARIAH'S CHALLENGE - மரியாவின் சவால்...!!!

 நண்பர்களே...!!!
பிரபல பதிவர் லக்கிலூக் - யுவகிருஷ்ணா அவர்களுடைய வலைப்பூவில் படித்தது. தமிழகத்தின் இப்போதைய தேவை இதுமாதிரியான ஒரு முயற்சி என்பதால் இங்கே மறு பிரசுரம் செய்துள்ளேன். யுவகிருஷ்ணா அவர்களுக்கு நன்றிகள் பல...!!!
அக்டோபர் 28, 2007. பதினான்கு வயது மரியா செத்துப்போனாள்.
நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவள் மீது கார் மோதியது. காரை ஓட்டிவந்தவன் இருபது வயது இளைஞன். கண்மண் தெரியாத அளவுக்கு குடித்திருந்தான். மரியாவோடு நடந்து வந்த நண்பர்களுக்கும் படுகாயம். மருத்துவமனையில் பல மணி நேரம் வலியோடு துடிதுடிக்க உயிருக்குப் போராடி பரிதாபமாக மரணித்தாள் மரியா.
அமெரிக்காவில் இருக்கும் மாண்டனா ஒரு குடிகார மாகாணம். அந்நாட்டிலேயே அதிக குடிகாரர்கள் வசிக்கும் மாகாணங்கள் முதல் ஐந்தில் மாண்டனாவும் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் பட்டே நகரில்தான் மரியா வசித்தாள். அவளுடைய அகால மரணத்தையடுத்து, குடிப்பழக்கத்துக்கு எதிராக இங்கே கிளம்பிய குரல், இன்று அமெரிக்கா முழுக்க எதிரொலிக்கிறது.
மரியாவின் மரணத்தையடுத்து அவரது தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தவும், அவரது தந்தை மெக்கார்த்தியிடம் துக்கம் விசாரிக்கவும் அவளது வீட்டில் கூடினார்கள். நியாயமாகப் பார்க்கப்போனால் மகள் இறந்த துக்கத்திலிருந்த மெக்கார்த்தி, அவளது அநியாய மரணத்துக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கில் போடவேண்டும் என்றுதான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதானமாக யோசித்தார். குடிபோதையில் கார் ஓட்டிவந்தவனை குடிநோயாளியாகதான் பார்த்தார். நோய்க்கு சிகிச்சைதான் அவசியம். தண்டனையல்ல என்று நினைத்தார்.

மரியா சவப்பெட்டியில் கிடக்க, சக மாணவியின் திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில் பயந்துப்போயிருந்த குழந்தைகளிடம் ஓர் உரை நிகழ்த்தினார் மெக்கார்த்தி.
“குழந்தைகளே! மரியாவின் மரணத்தோடு நம்முடைய நம்பிக்கைகள் முற்றுப்பெற்றுவிடப் போவதில்லை. இந்த அகால மரணத்தின் பின்னணியில் இருக்கும் பிரச்னைகளை நாம் பேசியாகவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
நான்கே நான்கு ஆண்டுகள் மட்டும் நான் சொல்வதை கேளுங்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த சவாலை வெல்பவர்களுக்கு இறுதியில் நான் பணம் தருவேன்”
மரியாவின் குரலாகவே அவரது தந்தையின் குரலை மாணவர்கள் கேட்டார்கள். அவரது சவாலில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் இவைதான்.

* உங்களது வயது இருபத்தி ஒன்றுக்கு கீழே இருந்தால் நீங்கள் மதுபானத்தை தொடவே கூடாது. யாரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனத்தில் ஏறக்கூடாது.

* இருபத்தி ஒன்று வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் குடிப்பதை நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது உங்கள் தேர்வு. ஆனால் குடித்துவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக நீங்கள் திகழ வேண்டும்.

* நீங்கள் மதுபானம் விற்கும் பணியில் இருப்பவரேயானால் குழந்தைகளின் கைக்கு அது கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் இருப்பவரேயானால் நமது சட்டத்தை முழுமையாக பின்பற்றி குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மெக்கார்த்தியால் வெளியிடப்பட்ட ‘மரியாவின் சவால்’, அவள் வயது குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பொருந்தியது. இந்த சவால் விவரம் ஊடகங்களில் வெளியாக, அடுத்த சில நாட்களிலேயே சுற்றுவட்டார மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இச்சவாலை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து மரியாவின் சவால் குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
மெக்கார்த்தி சொல்பேச்சு தவறாதவர். முதல் கட்டமாக சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி கண்ட 140 பேருக்கு தலா ஆயிரம் டாலர் (நம்மூர் பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்) வழங்கினார். மரியா இறந்த விபத்தில் அவளோடு படுகாயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோரும் மெக்கார்த்தியோடு இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த உதவித்தொகை விவரத்தை கேள்விப்பட்ட பல நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மரியாவின் சவாலை ஏற்றுக்கொண்டு வெல்பவர்களுக்கு பணம் தர ஒப்புக் கொண்டது. அமெரிக்காவெங்கும் இப்போது பலரும் இந்தப் பணிக்கு பொருள்ரீதியான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
பீப்பிள் பத்திரிகை மெக்கார்த்தியை நாட்டின் முக்கியமான முப்பது நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராய் புகழாரம் சூட்டியது. ஐம்பத்தி இரண்டு வயதாகும் மெக்கார்த்தி இப்போது அமெரிக்காவின் ஹீரோ.  2012ன் சிறந்த மனிதர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டிருக்கும் முதல் பத்து பேரில் மெக்கார்த்தியும் இடம்பெற்றிருக்கிறார்.
மரியாவின் சவாலை நாமும் எடுத்துக் கொள்ளலாம். www.mariahschallenge.com/ என்கிற இணையத்தள முகவரிக்கு சென்று, இச்சவாலை ஒப்புக்கொள்வதாக ஒப்பந்தம் இடவேண்டும். சவால் காலத்தில் குடி தொடர்பான எந்த குற்றச்சாட்டும் பெறாதவர்கள், சவால் காலம் முடிந்தவுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மரியாவின் சவால் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று 300 வரிகளில் விளக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பவர்களை மெக்கார்த்தியும், அவரோடு இணைந்திருப்பவர்களும் நேர்முகம் காண்பார்கள். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்டு குழந்தைகளும் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் மெக்கார்த்தி அதற்காக மகிழ்ச்சியடைவாரே தவிர, கூடுதல் பரிசு தரவேண்டியிருக்கிறதே என்று சோர்ந்துவிட மாட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் மரியாவின் சவால் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சவாலை வென்று உதவித்தொகை பெற்ற ஜோஷ் என்கிற மாணவர் சொல்கிறார். “பார்ட்டிகளில் குடிப்பதை தவிர உருப்படியான நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன என்பதை மரியாவின் சவால் உணர்த்தியது. இப்போது இரண்டு பகுதிநேர வேலைகளை செய்து, நிறைய பணம் சம்பாதிக்கிறேன். விளையாட்டுகளிலும் ஆர்வமாக பங்கேற்கிறேன். இந்தப் பாதையில் பயணம் செய்ததால் நிறைய பேருக்கு என் மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நிறைய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது”
மாணவப் பருவத்தில் குடியைத் தொடாதவர்கள் பெரும்பாலும் பிற்பாடு அப்பழக்கத்துக்கு அடிமையாவதில்லை. மரியாவின் சவால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தருவதால், அவர்களது எதிர்காலம் குடிநோயில் வீழாமல் பாதுகாப்பானதாக மாறுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் பலரும் கூட இச்சவாலை ஏற்றிருக்கிறார்கள். உதவித்தொகைக்காக அல்ல. குடிப்பது தவறு என்று குழந்தைகளுக்கு போதிக்கும் முன்பாக, தாங்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற தார்மீக உணர்வுக்காக.
“மரியாவை நான் திரும்பப் பெற முடியாது. ஆனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு ஒரு தந்தைக்கு ஏற்படாமல் தடுக்க முடியும்” என்கிறார் மெக்கார்த்தி.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சவால் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய அவசரத்தேவை.
 - நன்றி யுவகிருஷ்ணா 

Monday, January 21, 2013

நீயா நானா: காதல் திருமணம் - 20.1.2013

நண்பர்களே...!!!

நான் கொஞ்சம் அரிதாக தான் இங்க எழுதுவேன். நிஜமாவே என் மனதை பாதிக்கிற விசயங்களுக்காக மட்டும் நான் ஒதுக்கின பக்கம் இது. நேத்து நான் பார்த்த நீயா நானா நிகழ்ச்சி என்னை மறுபடியும் எழுத வெச்சது.

காதல் திருமணத்தை எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம் அப்படின்னு ரெண்டு குரூப் பேசினாங்க. இதுல நான் புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் முக்கால் வாசி பேர் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க. இன்னொரு முக்கியமான விஷயம் எல்லாருமே நடுத்தர வயது, நடுத்தர வயதை கடந்தவர்கள். இப்போதைய தலைமுறை இளைஞர்கள் யாரும் இல்லை.

காதலை எதிர்க்கிறோம்ன்னு பேசினவங்க எல்லாரும் கிட்டத்தட்ட சில விசயங்களை அதுக்கு காரணமா சொன்னாங்க - ஜாதி (குறிப்பாக தாழ்த்தப்பட்டவங்களை ), பணம், குடும்ப கவுரவம் இதெல்லாம் சொன்னாங்க. இது ஓரளவுக்கு ஒத்துக்ககூடியதே. நானும் இதுமாதிரி நெறையபேரை பார்த்திருக்கேன். காதலை ஆதரிக்கிறோம்ன்னு பேசினவங்க சொன்ன ஒரே காரணம் அவங்க பிள்ளைகள் சந்தோசமே. இதுவும் எற்றுக்கொள்ளகூடியதே.

என்னை பாதிச்ச ரெண்டு விஷயங்கள் - தன் பெண் காதலித்தால் வெட்டிடுவேன்னு சொன்ன ஒரு அப்பா. அவர் அப்படி சொல்ல தனிப்பட்ட காரணம் எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா இன்னொருவரை வெட்ட அவருக்க என்ன உரிமை இருக்கிறது ? இல்லை காதல் அப்படி என்ன தகாத குற்றமாகிவிட்டதா? இல்லை அப்பா அம்மா பார்த்து வைக்கும் அத்தனை திருமணங்களும் அப்படியே பூத்து குலுங்குகிறதா என்ன? அதிலும் பெண் பிள்ளையை மட்டும் தான் வெட்டுவாராம். பையனாக இருந்தாலும் எப்படியோ போ என்று விட்டு விடுவாராம். (இதற்கு என்னென்னவோ காரணம் சொல்ல முயன்று பிறகு அவரது ஜாதி மீதான பற்று என உண்மையை சொல்லவைத்து பல்பு கொடுத்தது தனி கதை...!!!)



இன்னொருவர்  தனது காதல் திருமணம் தோற்று விட்டதாக பேசின ஒரு கணவர். அவர் பேசியவரையில் அவரது காதல் மனைவியிடம் எதுவும் குறை இருந்ததாக தெரியவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் எதுவும் குறை கூறவில்லை. அவர் பேசிய வரையில் இந்த சமுதாயத்திலும், உறவினர்கள் நண்பர்கள் மத்தியிலும் தான் மதிக்கப்படவில்லை என வருத்தப்பட்டதாகவே  பட்டது. ஆனால் அதற்கு அவர் பேசிய வார்த்தைகள் கடுமை - காதலில் வெற்றி பெற்றேன் ஆனால் வாழ்க்கையில் தோத்து போயிட்டேன்னார். தன் மனைவியுடன் சந்தோசமாக இல்லை அப்படின்னு பகிங்கரமாக ஒத்துக்கிட்டார். காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டு குழந்தைகள் வேற பெத்துக்கிட்டு, தன் காதலை, காதல் மனைவியை எப்படி இவரால் விட்டுகொடுக்க முடிந்தது ? அப்போ இவர் உண்மையாக காதலிக்கவில்லை இவர் காதலில் உண்மை இல்லை என்பதாகத்தானே அர்த்தம் ?

இவங்க பேசினது எல்லாம் பார்த்தா என்னவோ காதல் திருமணம் பண்ணினவங்கதான் கஷ்டப்படற மாதிரியும், அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணினவங்க ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரியும் பேசினாங்க. எல்லாம் கேட்டு முடிந்த பின்னர் எனக்கு தோணினது -  காதலில் எதுவும் பிரச்சனை எல்லாம் இல்லை. பிரச்சனை எல்லாம் காதலிக்கிறவங்க கிட்டதான்...!!!

Thursday, September 6, 2012

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்...!!!


காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் அரிய புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன்  பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது

நிதிமிகுந்தவர் காசுகள் தாரீர்! (தொழில்) நுட்பம் தெரிந்தவர் மின்னாக்கம் செய்வதில் உங்கள் அறிவு, நுட்பத்தைத் தாருங்கள்!

புதுக்கோட்டை, அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களில் மின்னாக்கம் செய்வதில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்களை அறிவீர்களா? ஞானலயாவுக்கு உதவும் கரங்களாக அவர்களும் பங்கெடுத்துக் கொள்ளும் விதத்தில்  தகவல் சொல்லி இணையச் செய்யுங்கள்!

குறைந்தபட்ச உதவியாக, உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ஞானாலயா உதவிக் கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்! இப்படி ஒரு பதிப்புலகின், புத்தகங்களின் ஆவணக் காப்பகமாக, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் ஒரு புத்தக சேகரத்துக்கு, விழுதுகளாய்த் தாங்க வேண்டியதன் அவசர, அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்!

இந்த செய்தியை முடிந்தவரை பகிர்ந்து கொண்டு உதவுங்கள்!

https://plus.google.com/u/0/100136180757516760874/posts/ANd8aP5VqUX

Monday, September 3, 2012

இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்...!!!

தினமலர் செய்தி  - ஆகஸ்ட் 30,2012

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் (?) கபில் சிபல்: நிலக்கரியே விற்காதபோது எப்படி வரும் முறைகேடு?

 என்னா ஒரு புத்திசாலித்தனம்...!!! எல்லாரும் கிண்டல் பண்றாங்கன்னு நீங்க ஒன்னும் வருத்தபடாதிங்க அமைச்சர் சார்... ஊருக்குள்ள கழுதை மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாருக்கும் உங்க மேல பொறாமை... இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்...!!!

Tuesday, July 17, 2012

கொசு தொல்லை...!!!

மக்களே...!!!  

இன்னைக்கு நான் எழுத போறது சினிமா பத்தி... இல்ல....இல்ல... சினிமா விமர்சனம் அதுவும் இணையத்துல சினிமா விமர்சனம் அப்படிங்கற பேர்ல இப்போ நடக்கிற அநியாயங்களை பத்தி... அதுதான் சினிமா பத்தி எழுத நெறைய பேரு இருக்காங்களே...நமக்கு அதெல்லாம் எதுக்கு அப்படிங்கற ரீதியில தான் நான் ரொம்ப நாளா இருந்தேன்... ஆனா கொஞ்ச நாளா இணையத்துல வர சினிமா விமர்சனங்களை பார்க்கும்போதும், நடிகர் குறிப்பா நடிகைகளை பத்தின கமெண்டுகளை பார்க்கும்போது எரிச்சல் படாம இருக்க முடியல. 

முன்னாடி எல்லாம் விமர்சனம் பண்ணும்போது குறைகளை சொல்லுவாங்க. இப்போ குறை சொல்றதுக்குன்னு விமர்சனம் பண்றாங்க. அதுவும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி இவங்க அடிக்கிற கூத்தெல்லாம் பார்க்கும்போது கடவுளே முடியல... இதுக்கும் இவங்க எல்லாம் சினிமால தான் வேலை பார்க்கறாங்களாம். அவங்களை பொறுத்த வரைக்கும் இங்க யாருக்குமே சினிமா பண்ண தெரியல... இவங்கதான் சினிமாவை காப்பாத்த வந்த அப்பாடக்கர்கள்... தமிழ் சினிமாவை வளர்க்க இவங்களால மட்டும் தான் முடியும்...

சினிமா வளராம இருக்க என்னென்னவோ காரணம் சொல்ற இவங்க, அதுவும் ஒரு படம் ரிலீஸ் ஆயிட்ட உடனே முதல் நாளே அது சரியில்லை... இது சரியில்லை...அப்பப்பா...!!! ஆனா, எல்லாம் தெரிஞ்ச இவங்க எத்தனை படம் பண்ணியிருக்காங்கன்னு கேட்டா பதில் இல்லை... இதுக்கும் இவங்க விமர்சனம் அப்படின்னு எழுதரதெல்லாம் படம் பத்தின இவங்க சொந்த கருத்துக்கள் தான்... விமர்சனம் எல்லாம் இல்லை... இவங்களுக்கு ஆக்சன் படம் புடிக்காதுன்னா ரிலீஸ் ஆகிற ஆக்சன் படம் எல்லாம் மொக்கை படம் தான்... வில்லேஜ் சப்ஜெக்ட் புடிக்காதுன்னா எல்லா வில்லேஜ் படமும் ஒண்ணுக்கும் உதவாதவை... இதுக்கு ஆஹா ஒஹோன்னு ஜால்ரா போட ஒரு கூட்டம்...

அதை விட பரவாயில்லை, ஏதாவது சில வெளிநாட்டு படம் பார்த்துட வேண்டியது. அவரை போல வருமா...? இந்த படம் மாதிரி இல்லை.... இதெல்லாம் இந்த படத்துலயே வந்திடுச்சி..... அந்த படத்துலயே வந்திடுச்சின்னு ஒரே ஒப்பீடு தான். சினிமாங்கறதே ஒரு வியாபாரம் தான். சொத்தையெல்லாம் அடமானம் வெச்சி, கடன் வாங்கின்னு எத்தனையோ கஷ்டப்பட்டு தான் நெறைய பேரு சினிமா எடுக்க வராங்க. அதுக்கு பின்னாடி என்ன காரணம் வேணும்ன்னாலும் இருக்கட்டும், கஷ்டப்பட்டு தான் சினிமாவுக்கு வராங்க அப்படிங்கறது உண்மை.

படம் ரிலீஸ் ஆன முதல் ஒரு மணி நேரத்துக்குல்லயே மொக்கைன்னு விமர்சனம் மாதிரி ஒன்னு எழுதி போட்டா, அதுக்கூட ஒப்பனிங் வியாபாரத்தை பாதிக்கலாம்ன்னு சினிமாவை காப்பாத்த வந்த பாதுகாவலர்கள் மாதிரி சீன விடற இவங்களுக்கு ஒரு காமன்சென்ஸ் ஏன் இல்லாம போச்சி...? ஏன்... அதே மொக்கை விமர்சனத்தை ஒரு வாரம் கழிச்சி போட்டா என்ன சாமி வந்து கண்ணையா குத்த போகுது...?

மொக்கை படத்தை மொக்கை படம்ன்னு எழுதுங்க... ஆனா இவங்களை பொறுத்த வரைக்கும் எல்லாமே மொக்கை தான். இவங்களுக்கு உலகத்துல இருக்கிற எல்லா மொழி படங்களும், வெளிநாட்டு படங்களும் உட்பட வசதிகள் வாய்ப்புகள் இருக்கு. அப்படி பார்த்து பார்த்து உங்க ரசனைய உயர்த்தி வெச்சிருக்கிங்க... அதாவது அது மாதிரி சீன போடறிங்க... உங்களுக்கு தமிழ்ல வந்த எந்திரன் எல்லாம் ஜுஜுபி. இவங்க எந்திரன் பாக்கும்போது அதைவிட பலநூறு மடங்கு செலவு பண்ணி எடுத்த, டெர்மினேட்டர் கூடவும், ஐ ரோபோட் கூடவும் தான் ஒப்பிடுவாங்க. மொக்கை அப்படிம்பாங்க... இவங்களை போல இருக்கவங்க தமிழ் நாட்டு ரசிகர்கள்ள ஒரு பத்து சதவிதம் இருப்பாங்களா..? ஆனா, இன்னமும் சிங்கள் ஸ்க்ரீன்ல பழைய எம்ஜியார் படத்து கலர் பல்பு பாதாள அறையை வியப்பா பார்க்கிற ரசிகர்கள் எவ்வளவோ பேரு எனக்கு தெரியும். அவங்களுக்கு இந்த படங்கள் சூப்பர்தான்... இவங்களை பொருத்தவரைக்கும் தொடை தட்டி சவால் விடற ஹீரோ, பறந்து பறந்து சண்டை போடற ஹீரோ போதும்.

அண்ணே அண்ணே அப்படின்னு நெனக்கிறேன்... ஒரு பழைய அர்ஜுன் படம். ரொம்ப பழசு... படு மொக்கை... அந்த படத்தை இப்போ தியேட்டரில் பார்த்திட்டு, அதுல அர்ஜுன் நான் ஒரு அனாதைன்னு வசனம் பேசறதை பார்த்து தியேட்டர்லயே அழுதவங்களை, அதுவும் இப்போ நான் பாத்திருக்கேன். இவங்களுக்கு நம்ம ஊரு பட்ஜெட்டுக்கு, நம்ம ஊரு ஸ்க்ரீன்ல காட்டுற மேஜிக் பெருசுதான்.

நம்ம ஊரு பட்ஜெட்ல, [பல நூறு கோடி கொட்டி எடுத்த படங்களோட தரத்துக்கு போட்டியா வர அளவுக்கு படங்கள் வரும்போது சில பல குறைகள் இருக்கத்தான் செய்யும். பாராட்ட தோனலைன்னாலும் குறை சொல்லியே அவங்களை முடிச்சிடாதிங்க...  கொஞ்சம் மனசாட்சியோட எழுதுங்கப்பா...!!!

Sunday, July 8, 2012

வேற என்ன சொல்ல....????

மக்களே....!!!

நான் என்னோட கோவம் நல்லது பிளாக்கை ரொம்ப நாள் முன்னாடி ஆரம்பிச்சேன். பல நல்ல விசயங்களை நம்ம வாசகர்களுக்கு சொல்ல  நெனச்சி பண்ணினது. ஆனா நெறைய வேலை பளுவுக்கு நடுவில இதை தொடர முடியாம போயிடுச்சி. ஆனா நான் நேத்து பார்த்த இந்த வீடியோ மறுபடியும் என்னை எழுத வெச்சிடுச்சி. 


இந்த வீடியோல இருக்கிறது எல்லாம் உண்மை அப்படிங்கறது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நானும் இதை பர்சனலா அனுபவிச்சவன் தான். கேக்கறவனுக்கு இது செய்தி. பார்க்கறவனுக்கு இது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. என்னை மாதிரி சில பேருக்கு இது வலி... வாழ்க்கை.....!!! வேற என்ன சொல்ல....???? Note: கோவம் நல்லது அப்படிங்கற இந்த பேரை கேப்டன் டிவியில பார்த்து தான் புடிச்சேன். ஸோ, நன்றி கேப்டன் டிவி.