மக்களே...!!!
வாழ்க்கை இருக்கே, அது ஒரு கடைசி பக்கத்தை கிழிச்சிட்ட துப்பறியும் நாவல் மாதிரி. அடுத்த நொடியில என்ன நடக்கும்ன்னு அந்த நொடி வர வரைக்கும் தெரியாது. அதே மாதிரி தான், நமக்கு வாய்க்கிற விசயங்களும். சில விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ சில பேருக்கு மட்டும் தான் சில அற்புதங்கள் பார்க்கவோ, கேக்கவோ அல்லது செய்யவோ வாய்க்கும். அதையெல்லாம் கேக்கும் போதே இப்படி கூட இருக்குமான்னு தான் நமக்கு தோணும்.
ஆஸ்திரேலியாவுல இருக்கிற ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 13 வயசுல நுரையீரல்ல இருக்கிற இரத்தகுழாய்ல இரத்தம் கட்டியாகி அடைச்சிக்கிட்டதால, நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதா போயிடுச்சி. அதுக்கு அவருக்கு 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டு, இரத்தம் கொடுக்கற பலப்பேரோட உதவியால எல்லாம் நல்லப்படியா முடிஞ்சது. நாமளா இருந்திருந்தா அதை அப்படியே மறந்திருப்போம். (தான் உடல் நலம் இல்லாதப்போ, பல இரத்தம் குடுக்கறவங்க உதவியால குணமாகி வரவங்கள்ள, எத்தனை பேரு மத்தவங்களுக்கு இரத்தம் குடுக்க முன் வராங்க நம்ம ஊர்ல ? ) வந்த அவருக்கு பலர் இரத்தம் குடுத்துதான் தான் பொழைச்சோம் அப்படிங்கற அந்த விஷயம் மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சி. 18 வயசு ஆனவங்க மட்டும் தான் இரத்தம் குடுக்க முடியும் அப்படிங்கறதால 18 வயசு ஆகிற வரைக்கும் காத்திருந்து, தன்னையும் ஒரு இரத்தம் கொடுக்கிறவரா பதிவு பண்ணிக்கிட்டார்.
அதுக்கு அப்புறமா, இரத்தம் குடுத்து சிலருக்கு உதவியும் பண்ணினார். ஆனா கடவுள் அவருக்குள்ள அவர் இரத்தத்துல ஒளிச்சி வெச்ச அற்புதம் அப்போ அவருக்கு தெரியல. அப்புறமா தான் டாக்டருங்க அதை கண்டுபுடுச்சாங்க. அது ஆன்டி -D - ANTI - D அப்படிங்கற ஒரு புரோட்டீன். இது இலட்சதுல ஒருத்தருக்கு தான் இரத்தத்துல இருக்கும். அம்மாவோட இரத்த வகை நெகடிவ் வகையாவும் (A - நெகடிவ், B - நெகடிவ் அப்படின்னு எல்லாம் சொல்வாங்களே அந்த நெகடிவ்), கர்ப்பப்பையில இருக்கிற குழந்தையோட இரத்தம் பாசிடிவ் வகையாவும் இருந்தா (அதே மாதிரி தான் பாசிடிவும்), குழந்தை பிறக்கும் போது ரெண்டு பேரோட இரத்தமும் கலந்து அம்மாவோட இரத்தமே அதாவது அம்மாவோட நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தையோட இரத்த புரோட்டீன்களை நோய் கிருமிகளா நெனச்சி (வேற இரத்த வகையா இருக்கிறதால), இரத்தத்தை கட்டி கட்டியா உறைய வெச்சி, குழந்தையை கொன்னுடும். இதை Rhesus disease அப்படின்னு சொல்வாங்க. இது கொடுமையான வியாதின்னு எல்லாம் சொல்ல முடியாது - இரத்தம் கொடுக்கும் போது ஒருத்தருக்கு தவறுதலான குரூப் இரத்தம் கொடுக்கிற மாதிரியான ஒரு நிகழ்வு. கல்யாணம் பண்ணிக்கிற ஆணும் பெண்ணும் தன்னோட இரத்த வகைகள் ரெண்டு பேருக்குமே பாசிடிவ் அல்லது நெகடிவ் அப்படின்னு இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டா இதை தடுக்க முடியும். அதுக்காக மாத்தி கல்யாணம் பண்ணிக்கிற எல்லாருக்கும் இந்த பிரச்சனை வரும்ன்னு கட்டாயம் எதுவும் இல்லை. குழந்தையோட இரத்த வகை எப்படி இருக்கு அப்படிங்கறதை பொறுத்து தான் இந்த பிரச்சனை வரதும், வராததும் இருக்கு.
ஓகே... விசயத்துக்கு வருவோம், இந்த பிரச்சனை இருக்கிறவங்களுக்கு, இந்த ஆன்டி - D ஒரு மருந்தா செயல்பட்டு அம்மாவோட இரத்தத்துல இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை குறைச்சி, குழந்தையை சாவுல இருந்து காப்பாத்தும். நம்ம கதையோட நாயகர் ஜேம்ஸ் ஹாரிசன் அவரோட இரத்தத்துல இந்த ஆன்டி - D இருந்தது. இதை தெரிஞ்சிக்கிட்ட அவர் செய்த காரியம் என்ன தெரியுமா? தன்னோட 18வது வயசுல இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்போ அவருக்கு வயசு 58 தன்னோட இரத்தத்தை தொடர்ந்து தானமா கொடுத்திட்டு வரார். இது வரைக்கும் இவரால காப்பாத்தபட்டிருக்கிற குழந்தைகளோட எண்ணிக்கை 2 மில்லியன் - அதாவது 20 இலட்சம் குழந்தைகள். இதை படிச்சதும் எனக்கு ஒரு நொடி மூச்சு நின்னே போச்சி. ஒரே ஆள் 20 இலட்சம் குழந்தைகளை காப்பாதியிருக்கார் அப்படின்னா, அவர் நெசமாலும் கடவுள் தானே.
அதுதான் நான் முதல்ல சொல்ல வந்த விஷயம், கடவுள் சில பேருக்கு மட்டும் தான் இந்த மாதிரி அற்புதங்களை வெப்பார். அது சரி, எல்லாருக்கும் இருந்திட்டா அப்புறம் அதுக்கு பேரு அற்புதம் கிடையாது இல்ல....!!!!
No comments:
Post a Comment