Zool Ad Network

Monday, January 21, 2013

நீயா நானா: காதல் திருமணம் - 20.1.2013

நண்பர்களே...!!!

நான் கொஞ்சம் அரிதாக தான் இங்க எழுதுவேன். நிஜமாவே என் மனதை பாதிக்கிற விசயங்களுக்காக மட்டும் நான் ஒதுக்கின பக்கம் இது. நேத்து நான் பார்த்த நீயா நானா நிகழ்ச்சி என்னை மறுபடியும் எழுத வெச்சது.

காதல் திருமணத்தை எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம் அப்படின்னு ரெண்டு குரூப் பேசினாங்க. இதுல நான் புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் முக்கால் வாசி பேர் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க. இன்னொரு முக்கியமான விஷயம் எல்லாருமே நடுத்தர வயது, நடுத்தர வயதை கடந்தவர்கள். இப்போதைய தலைமுறை இளைஞர்கள் யாரும் இல்லை.

காதலை எதிர்க்கிறோம்ன்னு பேசினவங்க எல்லாரும் கிட்டத்தட்ட சில விசயங்களை அதுக்கு காரணமா சொன்னாங்க - ஜாதி (குறிப்பாக தாழ்த்தப்பட்டவங்களை ), பணம், குடும்ப கவுரவம் இதெல்லாம் சொன்னாங்க. இது ஓரளவுக்கு ஒத்துக்ககூடியதே. நானும் இதுமாதிரி நெறையபேரை பார்த்திருக்கேன். காதலை ஆதரிக்கிறோம்ன்னு பேசினவங்க சொன்ன ஒரே காரணம் அவங்க பிள்ளைகள் சந்தோசமே. இதுவும் எற்றுக்கொள்ளகூடியதே.

என்னை பாதிச்ச ரெண்டு விஷயங்கள் - தன் பெண் காதலித்தால் வெட்டிடுவேன்னு சொன்ன ஒரு அப்பா. அவர் அப்படி சொல்ல தனிப்பட்ட காரணம் எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா இன்னொருவரை வெட்ட அவருக்க என்ன உரிமை இருக்கிறது ? இல்லை காதல் அப்படி என்ன தகாத குற்றமாகிவிட்டதா? இல்லை அப்பா அம்மா பார்த்து வைக்கும் அத்தனை திருமணங்களும் அப்படியே பூத்து குலுங்குகிறதா என்ன? அதிலும் பெண் பிள்ளையை மட்டும் தான் வெட்டுவாராம். பையனாக இருந்தாலும் எப்படியோ போ என்று விட்டு விடுவாராம். (இதற்கு என்னென்னவோ காரணம் சொல்ல முயன்று பிறகு அவரது ஜாதி மீதான பற்று என உண்மையை சொல்லவைத்து பல்பு கொடுத்தது தனி கதை...!!!)



இன்னொருவர்  தனது காதல் திருமணம் தோற்று விட்டதாக பேசின ஒரு கணவர். அவர் பேசியவரையில் அவரது காதல் மனைவியிடம் எதுவும் குறை இருந்ததாக தெரியவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் எதுவும் குறை கூறவில்லை. அவர் பேசிய வரையில் இந்த சமுதாயத்திலும், உறவினர்கள் நண்பர்கள் மத்தியிலும் தான் மதிக்கப்படவில்லை என வருத்தப்பட்டதாகவே  பட்டது. ஆனால் அதற்கு அவர் பேசிய வார்த்தைகள் கடுமை - காதலில் வெற்றி பெற்றேன் ஆனால் வாழ்க்கையில் தோத்து போயிட்டேன்னார். தன் மனைவியுடன் சந்தோசமாக இல்லை அப்படின்னு பகிங்கரமாக ஒத்துக்கிட்டார். காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டு, ரெண்டு குழந்தைகள் வேற பெத்துக்கிட்டு, தன் காதலை, காதல் மனைவியை எப்படி இவரால் விட்டுகொடுக்க முடிந்தது ? அப்போ இவர் உண்மையாக காதலிக்கவில்லை இவர் காதலில் உண்மை இல்லை என்பதாகத்தானே அர்த்தம் ?

இவங்க பேசினது எல்லாம் பார்த்தா என்னவோ காதல் திருமணம் பண்ணினவங்கதான் கஷ்டப்படற மாதிரியும், அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணினவங்க ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரியும் பேசினாங்க. எல்லாம் கேட்டு முடிந்த பின்னர் எனக்கு தோணினது -  காதலில் எதுவும் பிரச்சனை எல்லாம் இல்லை. பிரச்சனை எல்லாம் காதலிக்கிறவங்க கிட்டதான்...!!!

No comments:

Post a Comment