மக்களே,
இது எனது FACEBOOK பக்கத்துல வந்த ஒரு தொலைப்பேசி பேச்சோட வீடியோ பதிவு. இதை பதிவு செய்தவரோட தகவல்கள் மற்றும் இந்த பதிவினுடைய உண்மைத்தன்மை பற்றி என்கிட்ட எந்த விதமான தகவல்களும் இல்லை. தெரியல. இதில் உள்ள மேலதிக தகவல்கள் எல்லாமே யூ டியூபில் காண கிடைத்து எடுக்கப்பட்டதே. இதில் பேசும் நபர் மிக ஆபாசமாக பேசுகிறார். எனவே இந்த பேச்சை கேட்க விரும்பாதவர்கள், வீடியோவை தவிர்க்கவும்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் நாஜிபாளையம் ஊராட்சி
செங்கோட்டையன் நகரில் வசிப்பவர் க.ஆனந்தராஜ்; 17-05-2013 அன்று நாஜிபாளையம்
துவக்கப்பள்ளி அருகே உள்ள விஜயன் டீ கடையில் கோவில் வரி சம்பந்தமாக ஊர்
கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பெரியாரியல்வாதியான ஆனந்தராஜிடமும் வரி
கேட்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு பெரியாரியல் வாதி எனக்கு கோவில்
விழாக்களில் உடன்பாடில்லை, எனவே நான் வரி தரமாட்டேன். என் அண்ணன்,
தம்பியிடம் வாங்கிகொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று
சொல்லியிருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே வரி கொடுத்தாக
வேண்டும் என்று பஞ்சாயத்தார் வற்புறுத்தியுள்ளனர்.
இதை மறுத்த ஆனந்தராஜ்,
அந்த டீ கடையில் இருந்த தண்ணீர் குடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக டம்ளரை
எடுத்துள்ளார். குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தண்ணீர் குடிப்பதா என்று அங்கிருந்த வீரப்பன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஆனந்தராஜை
கடுமையாக திட்டி, குடத்தில் இருந்த தண்ணீரையும் கீழே ஊற்றியுள்ளனர். நான்
எல்லோருக்கும் பொதுவான குடம் என்று நினைத்துவிட்டேன் என்று கூறிவிட்டு
ஆனந்தராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அடுத்த நாள் ஊராட்சி மன்ற தலைவர்
இராஜா துரைசிங்கம், ஆனந்தராஜின் அம்மாவிடம் இதுபற்றி கடுமையான எச்சரிக்கை
செய்துள்ளார். உன் பையனுக்கு இவ்வளவு தைரியமா? குடியானவர்களுக்கு
சமமாயிட்டானா உன் பையன்? நான் மட்டும் அங்கிருந்திருந்தால் உன் பையனை
உதைக்காமல் விட்டிருக்கமாட்டேன். மரியாதையா வரியை கட்டிவிட்டு ஒழுக்கமா
இருக்க சொல்லு என்றும் எச்சரித்துள்ளார். இதை கேள்விபட்ட ஆனந்தராஜ் ஊராட்சி
மன்ற தலைவரிடம் நீங்களும் இப்படி சொல்லலாமா? என்று முறையிட்டிருக்கிறார்.
அந்த தொலைபேசி உரையாடலை நீங்களே கேளுங்கள்.
எனக்கு எதுவும் சொல்ல தெரியல.
இதை படிக்க மிகவும் கவலையாக உள்ளது
ReplyDeleteஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
இவர்கள் இந்த பாட்டை தினமும் படிக்க வேண்டும்