Zool Ad Network

Tuesday, February 26, 2013

சூரியனை கண்டுபிடித்தவர்


டாக்டர். ஜோன்ஸ் எட்வர்ட் சால்க். கண்டிப்பா நாம இந்த பேரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனா, இவர் பல ஆயிரக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான குழந்தைகளோட எதிர்காலத்தை முடங்கி போகாம பிரகாசமாக்கியவர். ஆச்சர்யமா இருக்கு இல்லை... சொல்றேன்.

இவரை ஜோன்ஸ் அப்படின்னு சொல்றேன். ஜோன்ஸ் பிறப்பால் அமெரிக்கர். நியூயார்க்ல யூத பெற்றோர்களுக்கு 1924 ல பிறந்தவர். அவ்வளவா வசதியில்லாத குடும்பம். ஆனாலும் அவரோட அப்பா அம்மா அவருக்கு நல்ல முறையில படிப்பை குடுக்கணும்ன்னு நெனச்சி நல்லா படிக்க வெச்சாங்க. நியூயார்க் மெடிக்கல் யுனிவர்சிட்டில டாக்டருக்கு படிச்சார். படிச்சது டாக்டருக்கா இருந்தாலும் ஒரு மருத்தவரா வேலை செய்ய இவருக்கு விருப்பம் இல்லை. மருத்துவ துறையில ஆராய்ச்சி செய்யவே விரும்பினார். 



1947 ஆம் வருஷம் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில் ஆராய்ச்சியாளராக வேலை செய்ய சந்தர்ப்பம் கெடைச்சது. ஒரு நல்ல டீம் செட் பண்ணினார். அடுத்த ஏழு வருடம் கடுமையான உழைப்பு. இந்த டீம் கண்டுபுடிச்சது போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து. 1955 ஆம் வருஷம் இந்த டீம் தன்னோட முதல் தடுப்பு மருந்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தது. இவங்க இந்த மருந்தை அறிமுகம் செய்தப்போ இரண்டாம் உலகப்போர் முடிவடைந்திருந்த சமயம். உலகம் முழுக்க பஞ்சம், பசி, பட்டினி. சாப்பாட்டுக்கே தாளம் போட்டுட்டு இருந்தப்போ மருத்துவ வசதிகள் பத்தி சொல்லவே வேணாம். போலியோ தான் அப்போ உலகத்தையே உலுக்கிட்டு இருந்த கொடிய நோய். பாதிக்கப்பட்டவங்கள்ல 90 சதவிதம் பேர் குழந்தைகள்.  அமெரிக்க அரசாங்கம் படுவேகமா இந்த ஆராய்ச்சிய முடுக்கி விட்டு பணத்தை கொட்டிக்கொடுத்தது. அமெரிக்காவில் 1952 ஆம் வருஷம் தான் மிக மோசமான வருசமா குறிப்பிடபட்டிருக்கு. இந்த ஒரு வருசத்துல மட்டும் 58000 போலியோ கேஸ் பதிவானது. கிட்டத்தட்ட 3200 பேர் இறந்து போனாங்க. 22000 பேர் கால்கள் செயல் இழந்து நடக்க முடியாம போனாங்க. இந்த கணக்கெல்லாம் முறையா பதிவானது மட்டும். முறையா பதிவாகாத கேஸ்கள் இன்னும் பல ஆயிரம் இருக்கும். இவ்வளவு ஏன், அந்த வருஷம் அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ரூஸ்வெல்ட்க்கே போலியோ வந்திடுச்சி.

ஜோன்ஸ் அவங்களோட டீம் அறிமுகப்படுத்தின தடுப்பு மருந்து முதன் முதல்ல டெஸ்ட்டுக்கு வந்தப்போ  அது ஒரு நாடு தழுவிய புரோக்ராமா நடத்தப்பட்டது. 20000 டாக்டர் மற்றும் ஹெல்த் ஆபிசர்களும், 64000 பள்ளி கல்வி அதிகாரிகள், 1800000 பள்ளி மாணவர்கள், 220000 உதவியாளர்கள் என நாடு முழுதும் இதில் பங்கெடுத்துகிட்டாங்க. ஏப்ரல் மாசம் 12 ஆம் தேதி, 1955 ஆம் வருஷம் இந்த சோதனை வெற்றி பெற்றதா அறிவிக்கப்பட்டது. இந்த நாளை அமெரிக்கா தேசிய விடுமுறை நாள் போல கொண்டாடியது. டாக்டர் ஜோன்ஸ்  "miracle worker," அப்படின்னு கொண்டாடப்பட்டார். 




இதுக்கு அப்புறம் நடந்தது தான் சிறப்பு. ஏழு வருஷம் ராத்திரி பகலா கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச தன்னோட மருந்துக்கு டாக்டர் ஜோன்ஸ் காப்புரிமை வாங்கல. வாங்க மறுத்திட்டார். அவர் மட்டும் காப்புரிமை வாங்கியிருந்தா இந்நேரம் அவரோட அடுத்த ஒரு 10-15 தலைமுறையே, இன்னும் அதுக்கும் மேலே பணத்தை குவிச்சிருப்பார். இன்னும் குவிச்சிட்டு இருந்திருப்பார். உலகம் முழுக்க இன்னும் இவரோட தடுப்பு மருந்தை தான் உபயோகப்படுத்தறாங்க. ஐபோன், ஐபேட் இதெல்லாம் கண்டுபுடிச்சி, அதுக்கு காப்புரிமை வாங்கி பணம் சம்பாதிச்சவங்களை எல்லாம் மேதைகள் என கொண்டாடும் நாம் இவர் பேரைக்கூட தெரிஞ்சி வெச்சிக்கல.

இந்த திட்டம் 1995, முதல் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 17 கோடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளார்கள்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் அந்த நிலை வருவது நம் கையில்தான் இருக்கிறது. - See more at: http://importantdays1000.blogspot.de/2011/09/world-polio-day-24.html#sthash.XXlYrlUy.dpuf
இந்தியாவில் உலக போலியோ நோய் தினம் அக்டோபர் 24 ஆம் தேதியும், போலியோ சொட்டு மருந்து தினம் வருடத்தின் ஆரம்ப மாதங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திலும் இந்தியா முழுவதும் 1995 ஆம் வருடத்தில் இருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் போன வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 18 கோடி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அதாவது போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. இது முழுக்க முழுக்க டாக்டர். ஜோன்ஸ் அவர்களின் கருணை உள்ளத்தின் விளைவே.  
இந்த திட்டம் 1995, முதல் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 17 கோடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளும் பயனடைந்துள்ளார்கள்.

தற்போது உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் போலியோ அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் அந்த நிலை வருவது நம் கையில்தான் இருக்கிறது. - See more at: http://importantdays1000.blogspot.de/2011/09/world-polio-day-24.html#sthash.XXlYrlUy.dpuf


ஒருமுறை ஒரு பத்திரிகை பேட்டியில ஜோன்ஸ் கிட்ட நீங்க ஏன் உங்க மருத்துக்கு காப்புரிமை வாங்கல ன்னு கேள்வி கேட்டாங்களாம். அதுக்கு அவர் சொன்னது '' என்னோட மருந்து சூரியன் மாதிரி உலகத்துக்கே பயன்பட கூடியது. நம்மால சூரியனுக்கு எப்படி காப்புரிமை வாங்க முடியும்? '' அப்படின்னு கேட்டாராம். 

மேன்மக்கள் எப்பவும் மேன்மக்கள் தான்.

Saturday, February 23, 2013

எம்.ஜி.ஆர் எழுதுகிறார்

MGR - இந்த மூன்று எழுத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு அளவிட முடியாதது. இந்த மூன்று எழுத்து நம் மக்களை மந்திரம் போல ஆட்டுவித்த காலம் ஒன்று இருந்தது. ஏன், இப்போதும் உள்ளது. இந்த அளவு மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட அவர் எழுதியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நீங்களும் படிச்சி பாருங்க...!!!!!!!

என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

                                    "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' திரு K. P. கேசவன் அவர்கள்


"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக்கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது. நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை. மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமைமிக்க கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு! ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.

கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது.

எவ்வளவு நிதர்சனமான உண்மை...!!!!!!!!! வாழ்வில் உயர்வு, தாழ்வு, பணம், புகழ் எல்லாம் மற்றவர்களால் நம் மீது ஏற்படுத்தப்படும் ஒரு போலியான மயக்கம் அவ்வளவே. இந்த உலகில் தங்க தட்டில் சாப்பிட்டு, வானளாவ புகழ் பெற்று, பின் இருந்த சுவடு இல்லாமல் காணாமல் போன எவ்வளவோ பேரை நாம் கண்முன்னால் கண்டிருந்தும் மக்கள் அதன் பின்னால் ஓடுவதை கண்டு சிரிப்பே வருகிறது. சிந்திப்போம்...!!!!!!!

நன்றி - தினமலர் வார மலர்.

Thursday, February 21, 2013

ஆண் Vs பெண்

ஒரு பெண் ஒரு நாள் இரவு வீடு திரும்பாமல் வெளியே தங்கி விட்டு, மறுநாள் காலை வீடு திரும்பினாள்.கணவனிடம்”நேற்று இரவு நேரமாகிவிட்டதால் என் உயிர்த்தோழி ஒருத்தியோடு தங்கி விட்டேன்”என்றாள். அவள் கணவன் அவள் உயிர்த்தோழிகள் பத்துப் பேருக்கு தொலைபேசி விசாரித்தான். அவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தெரியாது  எனச் சொல்லி விட்டார்கள்!

மறுநாள் கணவன் இரவு வீடு திரும்பாமல் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான்.மனைவியிடம் சொன்னான் ”நேற்று நேரமாகி விட்டதால் என் உயிர் நண்பன் ஒருவனுடன் தங்கி விட்டேன்.” அவன் மனைவி அவன் உயிர் நண்பர்கள் பத்துப்பேரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். 
ஒவ்வொருவருவரும் தனித்தனியே அதை உண்மையென்றும் அவருடன்தான் தங்கியதாகவும் சொன்னார்கள். அதில் இருவர் ஒருபடி மேலே போய் சொன்னது, 
                         '' அவர் இன்னும் இங்க தாங்க  இருக்காரு !!!!!!!!!!! ''

                                                                                                    - இணையத்தில் படித்தது 

Sunday, February 17, 2013

இது இப்போ தேவையான பதிவு


மக்களே...!!!

நம்ம கோவம் நல்லது வலைப்பூவுல போட அடுத்த பதிவு கெடைச்சிடுச்சி. உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கைப்படி நடுத்தர வளரும் நாடுகளில் நிகழும் சாலை விபத்துகளில் 90 சதவித விபத்துகளுக்கு மது போதையே காரணம் அப்படின்னு தெரிய வந்திருக்கு. இப்போ நம்ம மாநிலத்தில் இருக்கிற நிலைமை பத்தி நான் தனியா எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. 

உதாரணம் - எனது நண்பர்களில் ஒருவர் போன வாரம் சாலை விபத்தில் இறந்துட்டார். குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போய்  எங்கியோ மோதிட்டார். இதுக்கும் அவர் ஒன்னும் குடிக்கு அடிமையானவர் எல்லாம் கிடையாது. எப்பவாவது ரொம்ப அரிதா ஒருமுறை குடிக்கிறவர். மத்தவங்களுக்கு இது ஒரு செய்தி தான். ஆனா, அவர் குடும்பத்துக்கு...?????

அவர் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கிட்டவர். இவர் மற்றும் இவர் மனைவியோட சொந்தக்காரங்க கிட்ட இருந்து பெரிய அளவுக்கு எந்த ஆதரவும் கெடையாது. கிட்டத்தட்ட மூணு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு, இப்போ தான் சமீபத்துல அரசாங்க பள்ளியில் ஆசிரியர் வேலை கெடைச்சது. 4 வயசு மற்றும் 1 வயசுல ரெண்டு பெண் குழந்தைகள். எல்லாம் நல்லப்படியா முடிஞ்சி சரியா செட்டில் ஆக வேண்டிய நிலையில, இறந்துட்டார். காதல் மனைவி, குட்டியா தேவதை மாதிரி ரெண்டு சின்ன வயசு குழந்தைகள். அரசாங்க வேலை. எல்லாம் போய் இப்போ எல்லாரும் ஆதரவில்லாம நிக்கிறாங்க.

குடிக்காம இருக்க  முடியலையா...??? குடும்பத்தை நெனச்சி பாருங்க. அப்பவும் முடியலையா???? குறைந்த பட்சம் குடிச்சிட்டு வெளிய போறது, வண்டி ஓட்றதுன்னாவது இல்லாம இருங்க.


இது ஒரு சின்ன உதாரணம். இப்படி எவ்வளவோ...!!!!!!!!! இதை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா, இப்போ நம்ம தமிழ்நாட்டுக்கு தேவையான ஒன்னு. கண்டிப்பா பாருங்க. கமெண்ட்ஸ் போடுங்க. 


Saturday, February 2, 2013

ரமணி Vs ரமணி - கலக்கல் காமெடி சீரியல்...!!!!

நண்பர்களே...!!! 

ரமணி Vs ரமணி - நம்மள்ள பல பேரு இந்த சீரியலை மறந்திருக்க முடியாது. ராஜ் டிவியில் வந்த சீரியல்ல மர்ம தேசம் சீரியலுக்கு அப்புறம் வெளி வந்திட்டு இருந்த அந்த காலத்துல இதுதான் டாப் மோஸ்ட் காமெடி சீரியல். இதுல ரெண்டு சீசன் வந்தது. இது எந்த சீசன்னு தெரியல. அனேகமா இதுதான் முதல் சீசன்னு நெனக்கிறேன். தேவதர்சினியும், ராம்ஜியும் அப்பாவித்தனமான நடிப்பால் கலக்கியிருப்பாங்க. பப்லு நடிச்சி வந்தது ரெண்டாவது சீசனா இருக்க நெறைய சான்ஸ் இருக்கு. 

                              

அதுலயும் அந்த குட்டி பொண்ணு வார்த்தை வார்த்தையா பேசி தன்னோட பங்குக்கு அசத்தியிருக்கும். மின்பிம்பங்கள் கம்பனியோட இன்னொரு ஹிட் சீரியல் இது.

நான் பெருசா ஒன்னும் சொல்லப்போறது இல்லை. லிங்க் தரேன். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.