Zool Ad Network

Sunday, February 17, 2013

இது இப்போ தேவையான பதிவு


மக்களே...!!!

நம்ம கோவம் நல்லது வலைப்பூவுல போட அடுத்த பதிவு கெடைச்சிடுச்சி. உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கைப்படி நடுத்தர வளரும் நாடுகளில் நிகழும் சாலை விபத்துகளில் 90 சதவித விபத்துகளுக்கு மது போதையே காரணம் அப்படின்னு தெரிய வந்திருக்கு. இப்போ நம்ம மாநிலத்தில் இருக்கிற நிலைமை பத்தி நான் தனியா எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. 

உதாரணம் - எனது நண்பர்களில் ஒருவர் போன வாரம் சாலை விபத்தில் இறந்துட்டார். குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போய்  எங்கியோ மோதிட்டார். இதுக்கும் அவர் ஒன்னும் குடிக்கு அடிமையானவர் எல்லாம் கிடையாது. எப்பவாவது ரொம்ப அரிதா ஒருமுறை குடிக்கிறவர். மத்தவங்களுக்கு இது ஒரு செய்தி தான். ஆனா, அவர் குடும்பத்துக்கு...?????

அவர் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கிட்டவர். இவர் மற்றும் இவர் மனைவியோட சொந்தக்காரங்க கிட்ட இருந்து பெரிய அளவுக்கு எந்த ஆதரவும் கெடையாது. கிட்டத்தட்ட மூணு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு, இப்போ தான் சமீபத்துல அரசாங்க பள்ளியில் ஆசிரியர் வேலை கெடைச்சது. 4 வயசு மற்றும் 1 வயசுல ரெண்டு பெண் குழந்தைகள். எல்லாம் நல்லப்படியா முடிஞ்சி சரியா செட்டில் ஆக வேண்டிய நிலையில, இறந்துட்டார். காதல் மனைவி, குட்டியா தேவதை மாதிரி ரெண்டு சின்ன வயசு குழந்தைகள். அரசாங்க வேலை. எல்லாம் போய் இப்போ எல்லாரும் ஆதரவில்லாம நிக்கிறாங்க.

குடிக்காம இருக்க  முடியலையா...??? குடும்பத்தை நெனச்சி பாருங்க. அப்பவும் முடியலையா???? குறைந்த பட்சம் குடிச்சிட்டு வெளிய போறது, வண்டி ஓட்றதுன்னாவது இல்லாம இருங்க.


இது ஒரு சின்ன உதாரணம். இப்படி எவ்வளவோ...!!!!!!!!! இதை பத்தி தனியா சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா, இப்போ நம்ம தமிழ்நாட்டுக்கு தேவையான ஒன்னு. கண்டிப்பா பாருங்க. கமெண்ட்ஸ் போடுங்க. 


1 comment:

  1. /குறைந்த பட்சம் குடிச்சிட்டு வெளிய போறது, வண்டி ஓட்றதுன்னாவது இல்லாம இருங்க./

    ஹாஹா...
    குடிக்காதன்னு சொன்னது போய்,குடிச்சாலும் வெளியில வராதன்னு சொல்ற அளவுக்கு சமூக நிலமை மாறிடிச்சு...

    போதையில வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்துறதால
    அவங்க குடும்பம் மட்டுமில்லாம,பல சமையங்கள்ல குடிபழக்கம் இல்லாதவங்களும் கூட பாதிக்கபடுறாங்க...

    ReplyDelete